இனிய ஆன்மீக உறவுகளுக்கு வணக்கம்

இரு நாட்களாக எம் குரு அகத்திய பெருமானின் பெருமைகளை எழுத முடியவில்லை – எம் குருவின் ஆசி படி ரச மணி உருவாக்கும் வேலையில் இருந்ததது அதன் காரணம்.

இன்று நம் குருவின் ரசவாதம் என்ற கலையை பற்றி பார்ப்போம்

ஆயக்கலைகள் 64-ல் 51-வது கலை ரச வாதம். இரசவாதத்தின் விளக்கம் அழியும் உடலை பாதுகாப்பதே ஆகும்.

ஆன்மாவுக்கு பிறப்பு இறப்பு இல்லை. பிறப்பை தவிர்க்க இறவாது இருக்க வேண்டும் என்பர் சித்தர்கள் .. ஆன்மாவுக்கு உள்புகுதலும் நிலை இல்லை என்பது எல்லோருக்கும் புரிவது இல்லை

காலன் எனுங் கொடிதான கடும் பகையை

நாம்.கற்பமெனும் கொடும் வாளினாலே கடிந்து விட்டோம்
என்பர் சித்தர்

காலன் வருகையை நினைத்து பயப்படாமல் கற்பம் என்னும் கவசத்தால் கண்ணான தேவநிலையை அடைவோம் என்கிறார் பாம்பாட்டி சித்தர்.

மரணத்தை வென்ற சித்தர்கள் தங்கள் நாட்களை வீணாக கழிக்காமல் மனித சமுதாயத்திற்கு பயன்பட வாழ்ந்தார்கள். அதன் பிரதி பலிப்பே ரச மணியை உருவாக்கியது

சித்தர்கள் தங்களது முயற்சியாலும் சிவநினைவாலும் தங்களது உடலையும் தாம் நினைத்தபடி மாற்றும் அரிய பொக்கிஷத்தை இரசமணி மூலம் பெற்றனர். வானில் பறந்தனர், கூடு விட்டு கூடு பாய்ந்தனர்.

இரசமணியின் பயன்கள்

(1) இரசமணி வைத்தி.ருப்பவர்களுக்கு சித்தர்களின் ஆசியும் அன்பும் கிடைக்கும் –

(2) இரசமணி இயற்கை சக்திகளான இடி, மின்னல் பூகம்பத்தில் இருந்து காக்கும் .

(3) இரசமணி இருப்பவர்களை மாந்ரீகம் துர்தேவதைகளால் ஒன்றும் பண்ண முடியாது

(4) இரசமணியை உடன் கொண்டு செல்ல காரியசித்தி ஆகும்.

(5) இரசமணி உடையோரிடம் வசியம் உண்டாகும்.

நல்ல ரச மணியின் குணாதிசயம்

(1) இரசமணியை வாயில் போட்டால் பசிவராது.

(2) இரசமணியை கிழங்கு வகைகளுடன் சேர்க்க கிழங்குகள் நீர்க்கும். இப்போது உள்ள காலகட்டத்தில் சில போலிசண்டாளர்கள் ஈயம், வெள்ளியத்தை கலந்து ரசத்தை மேல் பாகம் பூசி பாவத்தை சேர்க்கிறார்கள். உண்மையான ரச மணியை அணிந்து அகத்தியர் ஆசி பெற்று வாழ்க உறவுகளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *