குதிகால் வாதத்திற்கு வேலிபருத்தி
ஒத்தடம்

என்பது பழமொழி |

வேலிபருத்தி
வேலிபருத்தி கிராமங்களில் வெகு இலகுவாக கிடைக்கும் ஒரு அற்புத மூலிகை. சளி கபத்திற்கு கண் கண்ட மருந்து.அடிபட்டு இரத்தம் கட்டினால் வேலிபருத்தி ஒத்தடமும் உள்ளே குடிக்கவும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்’

பிரசவித்த பெண்களுக்கு வேலிபருத்தி, மிளகு, பூண்டு , கஷாயம் வைத்து கொடுத்தால் கர்ப்பபையில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.

வயதுக்கு வராமல் இருக்கும் குழந்தைகளுக்கு வேலிபருத்தி இலைகளும் மிளகும் அரைத்து கொடுத்தால் வெகு சீக்கிரம் பூப்படைவார்கள்.

வேலிபருத்தி வேரை பொடியாக்கி பாலில் கலந்து குடித்தால் வாயு தொல்லை சரியாகும்.

வேலிபருத்தி இலை, சிறிய வெங்காயம் இவற்றை அரைத்து கேழ்வரகு மாவுடன் கலந்து சூடுபடுத்தி முட்டியில் இரவு கட்டி காலையில் எடுத்தால் முட்டி வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

மூலிகைகளின் சொர்க்கபுரியான நம் பாரத தாயின் புதல்வர்களாகிய நாம் நம் பாரம்பரிய பக்கவிளைவில்லாத பொக்கிஷங்களை பயன்படுத்தி அன்னிய மோகத்திற்கு அடிபணியாமல் நம் குடும்ப நலனை காப்போம்.

சித்தனுக்கு மிஞ்சிய மனிதனுமில்லை
சித்த வைத்தியத்துக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *