குப்பையில் கிடைத்த கோமேதகம் 
குப்பை மேனி

குப்பை போல் ஆகிவிட்ட உடம்பை சுத்தபடுத்துவதால் குப்பை மேனி என பெயர் பெற்றது என்பது என் கருத்து .அதாவது வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க வல்ல எளிய மருந்து. இது தோட்டங்களிலும் சாலை ஓரங்களிலும் கிடைக்கும் மந்திர மூலிகை ஆகும்.

தோல் நோயை தொடாமல் பாதுகாக்கும் இதனை தேய்த்து குளித்தால் . தோல் நோய்க்கு இதனுடன் மஞ்சள் உப்பு சேர்த்து அரைத்து தேய்த்து ஊற வைத்து குளித்தால் மிக .நல்ல பலன் கிடைக்கும். தோல் நோயின் வீரியம் உடனே குறையும்.

குழந்தைகளுக்கு 4 சொட்டு குப்பை மேனி சாறு கொடுத்தால் மலத்தில் கிருமிகள் வெளியேறும்

குப்பை மேனியை அரைத்து இளஞ்சூட்டில்படுக்கை புண்களுக்கு கட்டலாம்.

ஆமணக்கு எண்ணெயில் தாழித்து கீரையாக உண்டால் வாயு சம்பந்தமான எல்லா பொல்லாத நோய்களும் போகும்.

கொசுக்கடி அலர்ஜி இவற்றிற்கு இதன் சாறு ஒருவரபிரசாதம். மூக்கு தண்டு மற்றும் நெற்றியில் சேரும் கபத்தை கரைக்கவல்லது குப்பை மேனி.
தலை பாரத்துக்கு குப்பை மேனியை அரைத்து பற்று போடலாம்.

மனிதனை பயமுறுத்தும் நோய்க்கு அந்தந்த இடத்தில் விளையும் மூலிகை களே மருந்து என்று எத்தனை பேருக்கு தெரியும்.

வீதியெல்லாம் விளைந்து கிடக்கும் குப்பை மேனியை கொண்டு குப்பையான நம்மேனியை இனியாவது சரிப்படுத்துவோம் அன்பர்களே. வாருங்கள் மறந்து விட்ட நமது மருத்துவ முறையை உலகிற்கு மூலை முடுக்கு எல்லாம் கொண்டு செல்வோம் –
மூலிகைகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவோம். வாருங்கள் நம் பாரம்பரியம் காப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *